ஆளுநரைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
Mayiladuthurai King 24x7 |7 Jan 2025 3:02 PM GMT
தமிழக ஆளுநரைக் கண்டித்து மயிலாடுதுறையில் தலைமை அஞ்சலகம் முன்பு திமுக 500-க்கு மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்:- ஆளுநர், அதிமுக பொதுச் செயலாளரைக் கண்டித்து முழக்கம்
தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து புறக்கணிக்கும் தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து மயிலாடுதுறையில் தலைமை அஞ்சலகம் முன்பு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரை காப்பாற்றும் அதிமுக-பாஜக ரகசிய கூட்டணியையும் கண்டித்தும், தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து புறக்கணிக்கும் ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்காத எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திமுகவினர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story