தனியார் பள்ளியில் கோலாலமான ஆண்டு விழா விளையாட்டுப்போட்டி

மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் கண்களைக் கவரும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே இடத்தில் சங்கமித்து நடனம் ஆடியது வெகுவாக கவர்ந்தது
மயிலாடுதுறை மறையூர் பகுதியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 13-ஆம் ஆண்டு விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஏடிஎஸ்பி ஜெயக்குமார் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பள்ளி மைதானத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பந்து மற்றும் வளையம் உள்ளிட்டவற்றை கொண்டு ஒருமித்து நடனமாடினார். இதனை அங்கு வந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பெற்றோர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். பின்னர் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Next Story