விஜய் பற்றி தனியார் டிவி புகழ் பாலா பேட்டி
Mayiladuthurai King 24x7 |11 Jan 2025 2:27 PM GMT
தனியார் தொலைக்காட்சி புகழ் பாலா செய்தியாளர்களின் கூறுகையில் விஜய் கட்சி பற்றிய கேள்விக்கு, அவர் மலை நான் மடு என்றார்
மயிலாடுதுறையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழர் தொலைக்காட்சி புகழ் பாலா செய்தியாளர்களின் கூறுகையில், விரைவில் சினிமாவில் மீண்டும் நடிக்கும் திட்டம் உள்ளது. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட பான் இந்தியா திரைப்படம் பெரிய அளவில் ஓடவில்லையே என்ற கேள்விக்கு பான் இந்தியாவில் நான் ஒரு படம் நடித்து அப்படம் வெளியாகட்டும், அதன்பின்னர் அது குறித்து கூறுகிறேன். எதிர்காலத்தில் பாலா அறக்கட்டளை தொடங்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு பாலா அறக்கட்டளை தொடங்கும் திட்டம் இல்லை. ஆனால், பாலா மக்களின் கட்டளைகளை எப்போதும் ஏற்று நிறைவேற்றுவேன் என்றார். நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாலா விஜய் மிகப்பெரிய மேதை அவர் பற்றி சொல்ல அந்தளவிற்கு எனக்கு அறிவு இல்லை. விஜய்க்கு ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு நான் கடுகுமாதிரி அவர் இமயமலை மாதிரி என்றார்.
Next Story