பெரியாரைப் பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு சீமானுக்கு ஆதர தெரிவித்தார் எச் ராஜா
பாரத தேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் இல்லை என்று அவசரஅவசரமாக சட்ட அமைச்சர் அந்த ஞானசேகரன் திமுககாரன் இல்லை என்கிறார். ஆனால் ஆர்.எஸ்.பாரதி நம்ம பையன்தான் என்று. கூறும் நிலையில் திமுகவின் 75 ஆவது ஆண்டு விழா ஏற்பாடுகளின் மேற்பார்வையை ஞானசேகரன் செய்முடியுமா?. தமிழக அரசு காவல்துறையை துஷ்பிரயோகம் செய்கிறது. இந்த வழக்கில் சென்னை கமிஷனர் அருண் வரம்பு மீறி திமுகவின் கரை வேட்டி கட்டாத உறுப்பினர் மாதிரி செயல்பட்டுள்ளது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அந்த சார் சொல்வது மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்று கல்லூரி மாணவியிடம் ஞானசேகரன் குறிப்பிட்டுள்ளதாக புகார் மனுவில் தெரிவித்துள்ள அந்த மாசு படிந்த சார் யார் என்று மக்களுக்கு தெரிய வேண்டும். ஆவுடையார் கோயிலில் திமுக மாவட்ட நிர்வாகி பாரதிராஜா என்பவர் ஒரு பெண்ணை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி பத்து லட்சம் பணம் கேட்டதாக புகார் அளித்தும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில் பால் கொடுக்க சென்ற பெண்ணை மது அருந்திய கும்பலில் ஒருவர் கற்பழித்து கொலை செய்துள்ளார். சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஒருவரை சஸ்பென்ட் செய்துள்ளது. திமுக கட்சிக்காரர்கள் பெண்களை வன்கொடுமை செய்து வருவதால் அவர்களை காப்பாற்றுவதற்காக காவல்துறையை திமுக அரசு அச்சுறுத்துகிறது. திமுக அரசு நாகரிமானவர்கள் என்று சொன்னால் ஆளுநரை டவுசரை கிழிப்பேன் என்று சொன்னவரை கட்சியிலிருந்து நீக்கி இருக்க வேண்டும். செய்யாமல் கேவலமான அரசாக தமிழக அரசு உள்ளது. ஆளுநரின் அரசு நிகழ்ச்சியில் துவக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும். அதை செய்யாமல் தேச விரோத சக்தியாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சபாநாயகர் அப்பாவு கவர்னரை தவறாக பேசிய அனைவர் மீதும் உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வர வேண்டும். திமுகவினர் எல்லாம் பெரியாரின் கூட்டம். தந்தை பெரியார் அநாகரிகமாக பேசினாரா நடந்து கொண்டாரா இல்லையா என்று கேள்வி எழுப்பிய எச் ராஜா பெரியார் தேசத்துரோகி பட்டியல் சமுதாயத்திற்கு எதிரானவர் தமிழ் தேச விரோதி பெண்களுக்கு எதிரான மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்பதற்கு ஆதாரம் உள்ளது. பெரியார் குறித்து விமர்சனம் செய்து எனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளேன். சீமானின் பல கருத்துகள் குறித்து எனக்கு உடன்பாடு கிடையாது. பெரியார் கறித்து சீமான் கூறிய கருதிற்காக கல்லை கொண்டு அடிப்பீர்களா? வெள்ளையன் வெளியேறினால் விஞ்ஞானம் வெளியேறிவிடும் என்று காந்தியடிகளுக்கு எதிராக தீர்மானம் போட்ட திகவினர் தேசவிரோதிகள். தமிழ் மொழியை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே வாழ்ந்து மறைந்தவர் பெரியார். இந்தியா சுதந்திரம் பெற்றதை துக்க நாள் என்று கூறியவர் பெரியார். ஈவேரா தினந்தோறும் விலைமாதர் வீடு புகுந்து வருவார், நண்பர்களோடு விலைமாதர் வீட்டிற்கு செல்வார், காவிரி ஆற்றங்கரையில் விலைமாதரோடும் நண்பர்களோடும் கூத்தடிப்பார் என்று நான் சொல்லவில்லை சாமி சிதம்பரனார் எழுதிய பெரியார் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பொதுவெளியில் சாப்பிடுவதும் உடலுறவு கொள்வதும் விலங்குகள் செய்யும் வேலை. அந்த விலங்குகள் செய்யும் வேலையை பெரியார்னு சொல்லுவீங்களா என்று கேள்வி எழுப்பினார். விலைமாதர்களோடு கூத்தடிப்பதற்காக மனைவி நாகம்மையை சமைத்து அனுப்ப சொல்லுவது பெண் அடிமைத்தனமா பெண் விடுதலையா என்று பகுத்தறிவு உள்ளவர்கள் யோசியுங்கள் என்றார். தமிழ் பிராமணர்கள் ஆயிரம் பேரை கொல்ல வேண்டும் என்று பேசியுள்ள பெரியாரை பைத்தியக்கார மருத்துவமனையில் சேர்த்து பைத்தியம் தெளிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை 1957 ஆம் ஆண்டு காமராஜருக்கு எழுதிய கடிதத்தில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டுள்ளார். ஈவேரா திக கூட்ட தீர்மானங்களை வெளியிட்ட பத்திரிக்கை மீது தாக்குதல் நடத்தியவர்கள் திகவினர். இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை துக்கநாள் என்று கூறினார். அவரை தேசதுரோகி என்று கூறாமல் என்ன செய்ய முடியும். வெள்ளைக்காரர்களின் கைக்கூலியாக இருந்துகொண்டு பேசுகிறார்கள். சீமான் பேசியது அத்தனையும் உண்மை. பெரியாரை பற்றி சீமான பேசியதை விட பேரறிஞர் அண்ணா பெரியாரை மோசமாக பேசியுள்ளார். கன்னிமரா நூலகம் சில ஆண்டுகளுக்குமுன் எரிக்கப்பட்டது. கருணாநிதி முதல்வராக வந்தபிறகு பெரியாரின் உண்மைகளை மறைப்பதற்காக பத்திரிக்கைகளில் வெளிவந்ததை அழிக்கிறதுக்காக நடந்தது என்று சொல்கிறார்கள். ஈவேரா என்பது வெங்காயம்தான். வெங்காயத்தை ஒவ்வொருதோழாக உரித்தால் ஒன்றும் இருக்காது. ஆதாரத்தை கொடு என்று கேட்கிறார்கள் ஆதாரம் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் குறித்து ஜவர்ஹலால் நேரு கூறிய பக்கத்தையே கிழித்தள்ளனர் என்றார். என்னோட வார்த்தை இல்லை பெரியாரின் வார்ததை திமுகவினர் தேர்தலில் ஓட்டு வேண்டும் என்றால் வீட்டு பெண்களை விட்டுவிடுவார்கள் என்று பெரியார் சொல்லியுள்ளார் என்றார். நடிகர் சத்தியராஜ் திக பேசுவார், பெரியார் படத்தில் நடிப்பார்.மகனுக்கு கல்யாணம் சனாதான முறைப்படி கோவிலில் நடத்துவார். வெட்கமாக இல்லையா சத்தியராஜ் ஒரு மோசடி பேர்வழி என்றார்.
Next Story



