மயிலாடுதுறை நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நகராட்சி 20-வது வார்டில் சாலை வசதி செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலையின் குறுக்கே நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கண்டனம் முழக்கம்
:- மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டில் சின்னசந்து புதிய அக்ரஹாரம் சாலையை அமைத்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தும், நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் 25-க்கு மேற்பட்டோர் இன்று சாலையின் குறுக்கே கோரிக்கை அடங்கிய பேனரை ஏந்திக்கொண்டு நின்று, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக சேதம் அடைந்துள்ள 300 மீட்டர் சாலையை சீரமைத்து தர அவர்கள் வலியுறுத்தினர்.
Next Story