காவல்துறை அலட்சியத்தால் விபத்து நிவாரணம் பெற முடியாமல் தவிப்பு

சாலை விபத்தில் கால் முறிந்து நான்கு ஆண்டுகளாக குணமாகாத நிலையில் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் விபத்து காயத்திற்கு விண்ணப்பித்த போது சிறு காயம் என்று கூறி உரிய நிவாரணம் வழங்கவில்லை என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து குற்றச்சாட்டு.
. மயிலாடுதுறை அருகே அரங்கக்குடியை சேர்ந்தவர் ஆனந்த் ஜெயசீலன். பந்தல் வேலை செய்யும் ஆனந்த் ஜெயசீலன் கடந்த 26/9/2021 அன்று வேலைக்கு சென்று திரும்பிய போது கடலி பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனத்தால் விபத்து ஏற்பட்டு வலது முன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலை அகற்ற வேண்டும் என்று கூறியதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்தும் குணமாகவில்லை, வேலைக்கு செல்ல முடியாததால் வாழ்வாதாரம் இழந்து தவித்துள்ளனர். போலீசார் சிறு காயம் என்று சான்று அளித்ததால் பத்தாயிரம் ரூபாய் அரசு நிவாரணம் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கால் முறிந்து அறுவை சிகிச்சைக்காக ரூ.15 லட்சம் செலவு செய்தும் கால் குணமாகாமல் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். ஆனந்த் ஜெயசீலனை அவரது மனைவி வினோதினி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கொண்டு சென்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டு ஊதிய நடவடிக்கை எடுக்கப்படும் இது ஆறுதல் கூறினார். .
Next Story