அறுவடைக்கு தயாரானநெல் வாயிலில் புகையன் தாக்குதல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா தாளடி பருவத்தில் 1.7 லட்சம் ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அறுவடை பணி துவங்கிவருகிறது. இம்மாவட்டத்தில் பெஞ்சால் புயல் நேரத்தில் நெற்பயிர்கள் கதிர் விட்ட நிலையில் அதிக மழையை பெற்றது, அதன்பிறகு தொடர் பனி மற்றும் நல்ல வெய்யில் இவைகளின் தாக்குதாலால் பல்வேறு நோய் தாக்குதலின்போது மருந்து தெளித்து கட்டுப்படுத்திவந்த விவசாயிகளுக்கு தற்பொழுது புகையான் எனும் எரிப்பூச்சி தாக்குதல் என்பது தீராத தலைவலியாகிவிட்டது. அறுவடை சமயத்தில் வயலில் ஆங்காங்கே புகையான் தாக்குதலால் வயலின் நட்ட நடுவில் காய்ந்தும், பல்வேறு இடங்களில் வயல்முழுவதும் புகாயான் தாக்கி அழிந்துள்ளது, மயிலாடுதுறையை ஒட்டியுள்ள அகரகீரங்குடி, கோவங்குடி, மன்னம்பந்தல் சித்தர்காடு போன்ற பகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள 4 தாலுக்காக்களிலும் 20 ஆயிரம் ஏக்கர்வரை புகையான் தாக்குதலால் இழப்பு ஏற்பட்டுள்ளது, அரசு அதிகாரிகள் விவசாய வயல்களை பார்வையிட்டு பயிர்காப்பீடு
Next Story





