மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு பொறுப்பேற்றுக்கொண்டார்
மயிலாடுதுறையில் பாஜக மாவட்டத் தலைவர் தேர்வுக்கான கருத்துக்கேட்புக் கூட்டம் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தலைமையில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில், கட்சி நிர்வாகிகள் 55 பேரிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், மாவட்ட தலைவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதைத்தொடர்ந்து, மாவட்ட தலைவர் பொறுப்பேற்பு நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முன்னாள் தலைவர் வெங்கடேசன், மாநில உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் முன்னிலையில் கட்சியின் மாநில செயலாளரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான புரட்சி கவிதாசன், மாவட்ட பார்வையாளர் பி.எல்.அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு, நாஞ்சில் ஆர்.பாலுவை மாவட்ட தலைவராக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து, நாஞ்சில் ஆர்.பாலு உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு மாவட்ட தலைவராக பொறுப்பேற்றார். இதில், மன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவர் மோடி.கண்ணன், மாவட்ட மகளிரணி செயலாளர் சித்ரா முத்துக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாஞ்சில் கே.பாலு இதற்கு முன்னர் மாவட்ட பொதுச்செயலாளராக பொறுப்பில் இருந்த நிலையில் புதிய மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற நாஞ்சில் ஆர்.பாலுவுக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இணிப்புகள் வழங்கி கொண்டாடினர். முன்னதாக கட்சியினர் மாவட்ட தலைவரை பேன்ட் வாத்தியங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Next Story





