நான்கு வழி சாலை பிரச்சனை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

நான்கு வழி சாலை பிரச்சனை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
X
சிங்கனோடை கிராமத்தின் வழியாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிசாலை தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சுற்றுப்பாதை இல்லாமல் அமைக்கபடுவதாக குற்றம்சாட்டி 12 கிராமமக்கள் சப்வே அமைக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு
;- சீர்காழி முதல் நாகப்பட்டினம் வரையில் என்.எச்.45 நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் திருக்கடையூர் ஊராட்சி மேலசிங்கனோடை கிராமத்தில் புதிய என்.எச்.332 சாலையில் செல்வதற்கான இணைப்பு சுற்றுப்பாதை இல்லாததால் மேல, கீழசிங்கனோடை, செட்டிமேடு, சின்னஆனைகோயில், பெரிய ஆனைகோயில், பத்துகட்டு, அனந்தமங்கலம், வேப்பஞ்சேரி, பிள்ளைபெருமாநல்லூர், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, மாணிக்கப்பங்கு உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 20 கி.மீ, தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுவதால் இணைப்புச்சாலை வேண்டி பணிகளை தடுத்து நிறுத்தி கட்நத 17ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுவரை நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முயற்சி எடுக்காததால் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து சப்வே அமைத்துதர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். அந்த மனுவில் சிங்கனோடை கிராமத்தில் சப்வே தேசிய நெடுஞ்சாலையில் செல்வதற்கான இணைப்புச்சாலை அமைத்துகொடுக்க வேண்டும் இல்லை என்றால் பலதலைமுறைகளாக வாழ்ந்துவரும் மக்கள் விவசாயம், மருத்துவம், பள்ளி கல்லூரி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு 20 கி.மீ, தூரம் சுற்றிக்கொண்டு செல்லவேண்டிய அவல நிலை ஏற்படும். இது குறித்து மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சப்வே அல்லது மேம்பாலம் அமைத்துகொடுக்க வேண்டும் இல்லை என்றால் 12 கிராம மக்களும் ஒன்றிணைந்து பெரிய அளவில் போராட்டம் நடத்தவேண்டிய சூழல் ஏற்படும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.
Next Story