இந்து அறநிலையத் துறை நடவடிக்கைகளை கண்டித்து குத்தாலத்தில் போராட்டம்

கோயில் மனைகளில் குடியிருப்போர், சிறு வணிகம் செய்வோர்களிடம் அதிக வாடகை வசூல் செய்யும் இந்துசமய அறநிலையத்துறையை கண்டித்து குத்தாலம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், வணிகர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சோழீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் பலர் பல தலைமுறைகளாக குடியிருந்தும், சிறு வணிகம் செய்தும் வருகின்றனர். இந்துசமய அறநிலையத்துறையின் சார்பாக நியாய வாடகை சட்டம் என்ற பெயரில் ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தி வந்த பகுதி தொகையை மாத வாடகையாக மாற்றம் செய்து வாடகையை பல மடங்கு உயர்த்தி நிலுவைத் தொகை என்ற பெயரில் பல லட்சங்கள் கணக்கிட்டு உடனே செலுத்த வேண்டும் எனவும் செலுத்த தவறினால் வாடகை உரிம ஒப்பந்தத்தை மீறியதற்காக இந்து சமய அறநிலையத்துறை சட்ட பிரிவுகளின்படி ஆக்கிரமிப்பாளர்களாக கருதி உடனடியாக வெளியேற்றப்படுவீர்கள் என்று இந்துசமய அறநிலையத்துறை அச்சுறுத்துவதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வணிகர்கள் சங்கத்தினர் கடையடைப்பு செய்து பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டதலைவர் ராயர் தலையைமில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில தலைவர் செல்வம், மாநில பொருளாளர் துரைராஜ் வர்த்தகர் சங்க பேரமைப்பு மற்றும் வணிகர் சங்க பேரவையினர் பொதமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் அநியாய வாடகை வசூலிக்கும் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்தும், மனை மட்டும்தான் கோயிலுக்கு சொந்தமானது என்ற நிலையில் மனையில் பயனாளிகள் கட்டிய கட்டிடத்திற்கும் சேர்த்து வாடகை வசூல் செய்வதை கண்டித்தும், பழைய பகுதி பசலி முறையை அமல்படுத்தக்கோரியும், வீட்டின் முன் பகுதியில் சிறிய அளவில் கடை கட்டி வணிகம் செய்தாலும், மொத்த இடத்திற்கும் வணிகம் என வாடகை வசூல் செய்வதை கண்டித்தும், சரியான அடிமனை அளவை கண்டறிந்து அதற்குண்டான பகுதியை மட்டும் வசூலிக்க கோரியும், அடிமனை குளறுபடிகளை நீக்கக் கோறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Next Story