தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம்
:- மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி இன்று கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் , 70 வயது முடிந்தவர்களுக்கு பத்து சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் கொடுத்திட வேண்டும் , புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை கலைந்து விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் மருத்துவ காப்பீட்டை செயல்படுத்தி மற்றவர்களுக்கு மருத்துவ படியாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும் , தமிழக அரசு உறுதியளித்தபடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்க மாநில நிர்வாக தீர்ப்பாயமும் கூட்டு ஆலோசனை குழுவும் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story





