அதிமுக திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்தும் திமுக

X
மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அதிமுக கொண்டு வந்த திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு ஆட்சி நடத்துவதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளருமான பவுன்ராஜ் விமர்சனம்
:- மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜ ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆன எஸ். பவுன்ராஜ் தலைமை கழக பேச்சாளர் நல்லாற்று நடராஜன் சிறப்புரையாற்றினர். இதில் பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கூறுகையில் மத்திய அரசு நீட் தேர்வு கொண்டு வந்தது. ஏழை மாணவர்கள் மருத்துவர் ஆவதற்காக எடப்பாடி பழனிச்சாமி 7.5 சதவீதம் இட உள் ஒதுக்கீடு செய்து கொடுத்ததால் தமிழகத்தில் ஒரு ஆண்டிற்கு 464 பேர் மருத்துவராகும் வாய்ப்பை பெற்றுத் தந்தார். 2025 ஆம் ஆண்டிலே 3600 க்கு மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்பு படித்து மருத்துவராகப் போகிறார்கள் எடப்பாடி யார் செய்த சாதனைகளில் ஒன்று. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று எதுவுமே செய்யாமல் நாங்கள் கொண்டு வந்த திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பெயர் பெற்றுக் கொண்டிருக்கும் ஸ்டாலின் அரசு எங்களை எப்படி கூறை கூறலாம். மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். ஆயிரம் ரூபாய் பணம் 28 மாதங்கள் கழித்து கொடுத்தீர்கள் அதையும் நாங்கள் தான் போராடி பெற்றுக் கொடுத்தோம். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பணம் கொடுப்போம் என்று சொல்லிவிட்டு ஏமாற்றுகிறது என்றார். காவல்துறையை கட்டுப்படுத்தி வைத்துள்ளதால் கஞ்சா சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றார். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் பாரதி சக்தி ராதாகிருஷ்ணன் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் மார்க்கோனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மயிலாடுதுறை மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி உள்ளிட்ட மொழிப்போர் தியாகிகளுக்கு அனைவரும் வீரவணக்கம் செலுத்தினர்.
Next Story

