தியாகி மாயவரம் சாரங்கபாணி நினைவு தூணுக்கு மரியாதை
இந்தியாவில் மத்திய அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழி சட்டம் 1963-ஐ அமல்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்த மாணவர் சாரங்கபாணி 1965-இல் கல்லூரி வளாகத்திலேயே தன்மீது தீ வைத்து கொண்டு உயிர் நீத்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், கல்லூரி வாயிலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, மன்னம்பந்தலில் உள்ள மொழிப்போர் தியாகி மாணவர் ஈகி. சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் திமுக மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினரும், அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவினரும், மதிமுக மாவட்ட செயலாளர் ராஜ் தலைமையில் மதிமுகவினரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் பாரி தலைமையிலும் தியாகி ஈகி.சாரங்கபாணியின் நினைவுத் ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து மலர்தூவி அதிமுகவினர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மொழிப்போர் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
Next Story



