திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டின பிரவேசித்திற்கான துவக்க விழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ஆம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் ஶ்ரீநமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. சைவத்தையும் தமிழையும் தழைத்தோங்க செய்யும் இவ்வாதீனத்தில் ஆதீன குருமுதல்வரின் குருபூஜை விழா மற்றும் ஆதீனகர்த்தரின் பட்டணப்பரவேச விழா ஆண்டுதோறும் தை அசுபதி தினத்தில் நமச்சிவாய மூர்த்திகள் மகர தலைநாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பட்டணப்பிரவேசவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சைவ சமயம் சார்ந்த புத்தகங்கள் வெளியீடு, சமூக பணி சைவப் பணி ஆகியவற்றில் சிறப்பான பணியாற்றி வருபவர்களுக்கு, பொற்கிழி மற்றும் விருதுகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று, விழாவின் சிகர நிகழ்வான 10-ஆம் திருநாளான ஆதீன குருமுதல்வர் குருபூஜை விழா மற்றும் ஆதீனகர்த்தரின் பட்டணப்பிரவேச விழா பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல்நாள் நிகழ்வாக ஆதீன திருமடத்தில் இன்று பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய மூன்று பேருக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தலா ரூ.5000 பொற்கிழி வழங்கி பாராட்டினார். தொடர்ந்து விழா மலரை வெளியிட்டு பக்தர்களுக்கு அருளாசி கூறினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story