மயிலாடுதுறையில் மூன்று அடுக்கு மாடி கட்டிடம் வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் ரூ.457.42 இலட்சம் மதிப்பீட்டில் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் .நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வ கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்கள் இக்கட்டடம் மூன்று தளங்களுடன் மொத்தம் 1197.75ச.மீ. பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் தரை தளம் 389.25ச.மீ., முதல் தளம் 389.25ச.மீ., இரண்டாம் தளம் 389.25ச.மீ., போர்டிக்கோ 30.00ச.மீ. உள்ளடக்கியவை ஆகும். மேலும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு அறை அமைந்துள்ளது. தரைத்தளத்தில் வட்டாட்சியர் அறை, சிறப்பு திட்ட வட்டாட்சியர் (தேர்தல்) காத்திருப்பு அறை, அலுவலக தேர்தல் வட்டாட்சியர், தேர்தல் அலுவலகம், பதிவு அறை, துணை வட்டாட்சியர் (தேர்தல்), ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைகள் அமைந்துள்ளது. முதல் தளத்தில் கணினி அறை, நில அளவை அலுவலகம், சமூக நல அலுவலகம், சமூக நல பதிவு அறை, பொதுவிநியோக வட்டாட்சியர் மற்றும் அதனைச் சார்ந்த அலுவலகங்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைகள் அமைந்துள்ளது. இரண்டாம் தளத்தில் கூட்ட அரங்கம், வட்டாட்சியர் (கலால்) மற்றும் அதனைச் சார்ந்த அலுவலகங்கள், ஆண்கள் உணவு அறை, பெண்கள் உணவு அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைகளுடன் கட்டப்பட்டுள்ளது.
Next Story



