நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மயிலாடுதுறை அருகே தில்லையாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் தில்லையாடி கிராமத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது அறுவடை செய்யப்படும் நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதற்காக தில்லையாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு தற்போது கொள்முதல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக தில்லையாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் கலந்து கொண்டு நெல் கொள்முதல் பணியை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அப்துல் மாலிக், அன்பழகன் அமுர்தா விஜயகுமார், மற்றும் திமுக நிர்வாகிகள் விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story