குத்தாலம் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கே 20 க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ள சம்பளம் வழங்கப்படாமல் குறைந்தபட்ச தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ள 50 ஆயிரம் ரூபாய் மாதம் ஊதியம் வழங்க வலியுறுத்தியும், இது தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியும், பணி நிரந்தரம் செய்ய வேண்டியும் இன்று வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் வரை தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் காலவரையற்று நடைபெறும் என்றும் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
Next Story




