வியாதியால் அவதிப்படும் மனைவியை கவனிக்க இயலாததால் தற்கொலை முயற்சி ஒருவர் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே மனைவியை கவனிக்க இயலாததால் வயதான தம்பதி தற்கொலை முயற்சி மனைவி பலி கணவர் இளங்கோவன் உயிர் ஊசல்
”:-  சிலிண்டரை திறந்துவிட்டு வெடிக்க வைத்ததில் படுகாயம் அடைந்த மனைவி பலியானார். கணவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு:- . உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் இளங்கோவன்(69)மயிலாடுதுறை ஒன்றிய திராவிடர் கழக தலைவர்   மயிலாடுதுறை அருகே நீடூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (69). ஹோமியோபதி டாக்டர். மற்றும் மயிலாடுதுறை ஒன்றிய திராவிட கழக தலைவராக இருப்பவர். . இவருக்கு செந்தாமரை (59) என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.  இளங்கோவனுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மனைவி செந்தாமரை சிறுநீரக கோளாறால் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணம் ஆகி மகள்கள் வெளியூரிலும் மகன் இனியவன் வீட்டின் மேல் பகுதியிலும் வசித்து வருகின்றனர் வயதான தம்பதியான இளங்கோவன் செந்தாமரையை கவனிப்பதற்கு ஆட்கள் இல்லை. செந்தாமரை படுத்த படுக்கையாக பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளார் கடந்த ஆறு மாதமாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்துள்ளது இவரால் சரியாக கவனிக்க முடியவில்லை  இதனால் மனமடைந்து இருந்த நிலையில் தற்கொலை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.  இன்று காலை கேஸ் சிலிண்டரை திறந்தவிட்டு இளங்கோவன் தனது மனைவியின் மீது அமர்ந்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது கேஸ் சிலிண்டர் வெடித்து தீ பரவியதில்  வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்து தரைமட்டமானது.  இளங்கோவன் செந்தாமரை இருவரும் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் வழியிலேயே செந்தாமரை பரிதாபமாக உயிரிழந்தார். இளங்கோவன் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர்  மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி கலைவாணி இளங்கோவனிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்த மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story