அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதுகட்டிடம் கட்ட பூமி பூஜை

திருவாள புத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.70.68 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டும் பணியினை ராஜகுமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சிக்குட்பட்ட திருவாள புத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை நடப்பதால் கூடுதல் வகுப்பறை வேண்டி மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமாரிடம் அப்பளியின் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்ற சட்டப்பேரவை உறுப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் அடிக்கல் நாட்டிற்கு துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) டென்னிஷ், ஆசிரியர்கள் உள்ளிட்ட திமுக பொறுப்பாளர்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story