மாற்றுத்திறனாளிச் சான்று கேட்டு ஒன்றரை மாதமாக அலையும் நபர்

முகவாதத்தால் அறுவை சிகிச்சை செய்து கண் காது பாதிக்கப்பட்ட நபர் மாற்றுத்திறனாளி சான்று கேட்டு ஒன்றரை மாதமாக நடக்க முடியாமல் அலைந்து வருவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து சான்று வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகவாதத்தால் பாதிக்கப்பட்டு மூளையில் அறுவை சிகிச்சை செய்த நபர் மாற்றுத்திறனாளி சான்று வேண்டி நடக்க முடியாமல் ஊன்றுகோலுடன் ஒன்றரை மாதமாக அலைந்து வருவதாக குற்றம் சாட்டி மாற்றுத்திறனாளி சான்று வேண்டி மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளார். தரங்கம்பாடி தாலுக்கா பரசலூரை சேர்ந்த வெங்கட்ரமணி. இவருக்கு முகவாதம் ஏற்பட்டதில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் இடது கண் மற்றும் காது பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு கண் தெரியாமலும் ஒருகாது கேட்காததால் அடிக்கடி சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு ரயிலில் சென்று வருகிறார். ரயிலில் மாற்றுத்திறனாளி பெட்டியில் ஏறிய போது போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மாற்றுத்திறனாளி சான்று இருந்தால் ரயிலில் பயணிக்கலாம் என்று ரயில்வே துறை அதிகாரிகள் கூறியதால் கடந்த டிசம்பர் மாதம் மாற்றுத்திறனாளி சான்று வழங்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஒன்றரை மாதமாக மாற்றுத்திறனாளி சான்றுக்காக அலைந்து வருவதாகவும் உடல் பலவீனமாக உள்ளதால் கைத்தடி உதவியுடன் ஒரு கண் தெரியாமலும் ஒரு காது கேட்காத நிலையில் மாற்றுத்திறனாளி சான்றுக்காக அலைந்து வருவதாக வேதனையுடன் தெரிவித்த வெங்கட்ரமணி தனக்கு மாற்றுத்திறனாளி சான்று வழங்கி உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story