அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் நியமனத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் கூட்டத்திற்கு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் வந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தேசிய மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக மனு அளித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறுகையில் மயிலாடுதுறை மகாதான தெருவில் அரசு உதவி பெறும் பள்ளியான டி.பி.டி ஆர் தேசிய மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில் பணி மூப்பின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள கலைவாணன் என்பவரை பள்ளி நிர்வாகம் தேர்ந்தெடுக்காமல் பனிமூப்பில் எட்டாவது இடத்தில் உள்ள நபரை பள்ளி நிர்வாகம் தலைமை ஆசிரியராக நியமித்துள்ளனர். கலைவாணன் தலித் என்பதால் பள்ளி நிர்வாகம் அவரை புறந்தள்ளுவதாக குற்றம் சாட்டி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலைவாணனை தகுதியின் அடிப்படையில் தலைமை ஆசிரியராக நியமிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக இன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து இந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். பள்ளி நிர்வாகத்தினர் தலித் என்ற காரணத்தினால் தகுதி உள்ள கலைவாணனுக்கு தலைமை ஆசிரியர் பதவியை வழங்காமல் எட்டாவது இடத்தில் உள்ள நபருக்கு வழங்கியுள்ளதை திரும்பப்பெற்று கலைவாணனை தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், எங்களின் கோரிக்கையை நியாயமானது என்றும் மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை நேரடியாக கொண்டு செல்வேன் என்று தெரிவித்தார்.
Next Story