திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு செல்லாமல் போலீசால் தடுத்தவர்கள் விடுவிப்பு
திருப்பரங்குன்றம் முருகன் மலையை சிக்கந்தர் மலை என பெயர் மாற்றம் செய்ய சிலர் முயற்சிப்பதாக கூறியும், திருப்பரங்குன்றம் மலையை மீட்க வலியுறுத்தியும் திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பிரச்னை நேரிடாமல் தடுக்க மதுரை மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து திருப்பங்குன்றம் செல்வதை தடுக்கும் வகையில் பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில்.பாலு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இன்று மாலை 5 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை சின்னக்கடைத் தெரு சித்தி விநாயகர் கோயில் முன்பு நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வுக்கு, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ் தலைமை வகித்தார். இதில், பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில்பாலு, மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன், விஷ்;வஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட இந்து அமைப்பினர் பங்கேற்று பேசினர். தொடர்ந்து, அனைவரும் தீபமேற்றி வழிபாடு மேற்கொண்டு, முழக்கங்களை எழுப்பினர்.
Next Story




