அரசு இடத்தில் தரைக் கடைகளை வியாபாரத்திற்கு அனுமதிக்காத கோவில் நிர்வாகம்
திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் ராஜகோபுரம் முன்பு உள்ள அரசுக்கு சொந்தமான சாலையில் தரைக்கடை வியாபாரிகளை வெளியேற்றி வாழ்வாதாரத்தை பறித்த கோயில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தப்படும் என்று நம் மக்கள் இயக்கத் தலைவர் வழக்கறிஞர் ஷங்கமித்திரன் தெரிவித்துள்ளார்.
:- மயிலாடுதுறை மாவட்டம் தரரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உலக புகழ்பெற்ற ஶ்ரீஅபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் உள்ளது. தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயில் ராஜகோபுரம் முன்பு உள்ள கருங்கல் சாலையில் 13 குடும்பங்களை சேர்ந்த ஏழை எளிய மக்கள் சூடம், சாம்பிரானி, விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் தரைகடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 29ஆம்தேதி தை அமாசையன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வருவதற்கு இடையூறு ஏற்படும் என்று கூறி தரைகடை போட வேண்டாம் என்று அறிவுத்தப்பட்டது. தொடர்ந்து தரைகடை போட வந்த வியாபாரிகளை தரைகடை போடுவதற்கு கோயில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் 13 குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து தவித்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வாழ்வாதாரம் இழந்த தவித்த தரைக்கடை வியாபாரிகளை சந்தித்து ஆறுதல் கூறிய நாம் மக்கள் இயக்க தலைவர் சங்கமித்திரன் சந்தித்து ஆறுதல் கூறி இது அரசுக்கு சொந்தமான இடம் ஆதலால் முதல் தரைகடை போட்டு விற்பனை செய்யுங்கள் என்று கூறியவர் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சங்கமித்திரன் கூறுகையில் அரசு இடத்தில் தரைகடை நடத்திவந்த மக்களிடம் நூறு ரூபாய் வசூல் செய்து வியாபாரம் செய்பவர்களுக்கு தொல்லைகொடுக்கும் கோயில் நிர்வாகத்தினர் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியின ஆதிதமிழர் குடியினர் மின்இணைப்பு கொடுப்பதற்கு கோயில் நிர்வாகம் புறக்கணித்து வருகின்றது. குளத்து புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும், திருக்கடையூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை ஆக்ரமித்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அரசு இடத்தை சட்டத்திற்கு புறம்பாக ஆதீனத்திற்கு பட்டா மாற்றப்பட்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளதை அகற்றி. அந்த இடத்தை கைப்பற்றி ஏழை மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தரைகடை வியாபாரிகளை வஞ்சித்தால் எங்கள் இயக்கம் தலையிட்டு ஆதீனத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றார்.
Next Story




