மனைவி மகள் பிரிந்த சோகம் ஆசாமி ரயில் முன் பாயந்து தற்கொலை

X
:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழுந்தூரை அடுத்த கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (51). பெயிண்டரான இவருக்கு வலிப்பு நோய் பாதிப்பு இருந்த காரணத்தால் வேலைக்கு செல்ல முடியாமல் வருமான இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ரமேஷின் மனைவி ரமேஷை பிரிந்து தனது மகளுடன் அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இதன் காரணமாக ரமேஷுக்கு குடிப்பழக்கமும் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக அடிக்கடி வலிப்பு நோய் பாதிப்புக்கு ஆளாகி வந்த ரமேஷ் இன்று மன உளைச்சல் காரணமாக ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற ரயில்வே போலீசார் ரமேஷின் உடலை மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

