பணியின் போது எஸ்.எஸ்.ஐ மாரடைப்பால் மரணம்

பணியின் போது எஸ்.எஸ்.ஐ மாரடைப்பால் மரணம்
X
மயிலாடுதுறை மாவட்ட நண்டலார் சோதனை சாவடியில் பணியின் போது ஏற்பட்ட மாரடைப்பில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு:-
தஞ்சை மாவட்டம் பாபநாசம் கோவிந்தநல்லூரை சேர்ந்தவர் பாலசுந்தரம்.54. வைத்தீஸ்வரன் கோயில் காவல் நியைத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் இன்று பொறையார் காவல் சரகம் மாவட்ட எல்லையான நண்டலார் காவல் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போது மதியம் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடன் சக பணியில் இருந்த போலீசார் அவரை முதலுதவி சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதமான நிலையில் கார் மூலம் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு சீதளாதேவி என்ற மனைவியும் 2 மகளும் உள்ளனர். இச்சம்பவம் போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story