புத்தக கண்காட்சியில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி வரவேற்ப்பு

மயிலாடுதுறை புத்தகத் திருவிழா கோலாகலம். மாவட்ட நிர்வாகம் மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் 1000 பேருக்கு 1 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி வழங்கினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விர்ச்சுவல் ரியலிட்டியை கண்டு ரசித்தனர்
மயிலாடுதுறையில் மூன்றாவது புத்தகத் திருவிழா கடந்த ஜனவரி 31ஆம்தேதி துவங்கி வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இப்புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் மாணவ மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 9ஆம் நாளன்று மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 800 மாணவ, மாணவிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 200 மாணவ, மாணவிகளுக்கும் மொத்தம் 1000 மாணவ,மாணவிகளுக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்த கொண்டு மாணவ மாணவிகள் ஆயிரம் பேருக்கு புத்தகங்களை வழங்கினார். தொடர்ந்து புத்தக அரங்குகளை பார்வையிட்டார். அப்போது தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை நூலக ஆணைக்குழுவின் மெய்நிகர் உண்மை (virutual reality) அரங்கத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு அசந்து போனார். இதில் பூமி சுற்றுவது, நட்சந்திரங்கள், க்ஷசூரியன் கோள்கள், அமேசான் காடுகள், பிரமாண்ட டைனோசர் உள்ளிட்டவை கண்ணேதிரே தோன்றி ஆச்சரியப்பட வைத்தன. இதனை தினந்தோறும் புத்தகத்திருவிழாவிற்கு வரும் மாணவ மாணவிகள் 1500 பேர் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளை அனைவரும் கண்டு ரசித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி, மயிலாடுதுறை ரோட்டரி சங்க சாசன தலைவர் ராமன், மயிலாடுதுறை ரோட்டரி சங்க தலைவர் இளங்கோவன், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா, செயலாளர் பொகுட்டுலினி, மயிலாடுதுறை வர்த்தக சங்க தலைவர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story