மயிலாடுதுறை மட்ட குளத்தில் தூய்மைப்பணி ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட மட்டகுளத்தில் தூய்மை பணியை பார்வையிட்ட ஆட்சியர் , மரக்கன்றுகளை படத்திற்காக நட வேண்டாம் ரியலாக நட்டு வையுங்கள் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை
:- மயிலாடுதுறை நகராட்சியில் 24 வது வார்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 68 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மட்டக்குளம் மேம்படுத்தப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. இதனிடையே குளம் பராமரிப்பு இன்றி இருந்ததால் ஆங்காங்கே முட்புதர்கள் மற்றும் குப்பைகளால் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று குளத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது குளத்தை சுற்றி நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இதனை கண்ட ஆட்சியர் படம் காட்ட வேண்டாம் ரியலாக மரக்கன்றுகள் நட வேண்டுமென அறிவுரை கூறினார். மேலும் நகரின் முக்கிய பகுதி என்பதால் ஏற்கனவே மரக்கன்றுகள் நட சொல்லியும் ஆணையர் கேட்கவில்லை என்றும் , எனவே அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடும்படி சேர்மேனிடம் தெரிவித்தார். பின்னர் குளத்தை சுற்றி உள்ள நடைபாதையில் ஆட்சியர் சென்றபோது அங்கு அருகில் உள்ள கிளைச் சிறையில் இருந்து கழிவுநீர் வெளியேறி ஓடிக்கொண்டிருந்தது. இதனைக் கண்ட ஆட்சியர் நடைபாதையில் கழிவுநீர் ஓடுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , அப்படி அகற்ற மறுத்தால் அரசு அதிகாரிகளாக உள்ள நீங்கள் கிளைச் சிறைக்கு நோட்டீஸ் அனுப்பலாம் எனவும் கூறினார். இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் , ஆர்டிஓ விஷ்ணு பிரியா உட்பட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story