காதலித்து கர்ப்பம் ஆக்கி திருமணத்திற்கு மறுத்து கருக்கலைப்பு செய்தவர்மீது புகார்

காதலித்து கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீதும் கருக்கலைப்பு செய்த மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி  ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில்  மனு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா ஆனந்தகூத்தன் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் அப்பகுதியில் பள்ளி படித்த மாணவி ஒருவரை கடந்த 2017ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார். பள்ளி படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனால் அந்த பெண் கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கர்ப்பமடைந்தார். தன்னை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியதும் ரஞ்சித் மற்றும் அவரது பெற்றோர் அந்த பெண்ணை சிதம்பரம்  அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  கருகலைப்பு செய்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து அந்த பெண்ணை அடித்து துரத்தியுள்ளனர்.  கருக்கலைப்பு செய்த  சான்றிதருடன் சீர்காழி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ரஞ்சித்திற்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்தி தனக்கு நியாயம் கிடைக்க செய்ய வெண்டுமென்று பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story