வேங்கைவயல் சம்பவம் விசிக ஆர்ப்பாட்டம்

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளியாக்கிய சிபிசிஐடி காவல்துறையை கண்டித்து மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
:- வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கிய சிபிசிஐடி காவல்துறையை கண்டித்தும், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க கோரியும் தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரியும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சிவ.மோகன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மேலிட பொறுப்பாளர் பரசு.முருகையன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story