நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதா நகலை கிழித்து கொளுத்தினர்

மத்திய அரசு பாராளுமன்றத்தில் வக்ஃப் மசோதாவை இன்று நிறைவேற்றியது. இதற்கு இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சியினர் தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ் டி பி ஐ மாவட்ட தலைவர் சபிக் அகமது தலைமையில் பத்துக்கு மேற்பட்டோர் மத்திய அரசு மற்றும் பாஜகவுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பியதுடன் மசோதா நகலை எரித்தும் கிழித்து எரிந்தும் போராட்டம் நடத்தினர். இதனை போலீசார் தடுத்த நிறுத்தி தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
Next Story

