பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
X
பழைய ஓய்வுவூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்கட்சி கட்சி தலைவராக இருந்த பொழுது மு க ஸ்டாலின்  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார்கள் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட சரண் விடுப்பு, அகவிலைப்படி நிலுவைத்தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலி முறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்,ஊர்புற நூலகர், பகுதி நேர ஆசிரியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். 21 மாத ஊதியமாற்ற நிலுவைத் தொகை உடன் வழங்க வேண்டும் என்று உரையாற்றினர்.
Next Story