மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இரட்டை படுகொலை.

மயிலாடுதுறை அருகே முட்டம் பகுதியில் தெருவில் நடைபெற்று வந்த சாராய வியாபாரத்தை தட்டி கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் ஆகிய இருவர் கத்தியால் குத்தி கொலை. மயிலாடுதுறை அரசு மருத்தவமனையில் போலீசார் குவிப்பு. இருவர் கைது
மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முட்டம் வடக்குதெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முனுசாமி, குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து அவரது வீட்டிலேயேசாராயம் விற்பனை செய்து வந்த நிலையில் தட்டி கேட்பவர்களை அடித்தும் கொலைமிரட்டல் விடுப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. சாராயவியாபாரி ராஜ்குமாரை போலீசார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள் என்று கேட்ட 17 வயது சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிகேட்ட முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ்(25), (பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்), மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் ஹரிசக்தி(20) ஆகியோரை சாராய வியாபாரிகள் ராஜ்குமார் மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் தகறாரில் ஈடுபட்டு சராமாரியாக கத்தியால் குத்தியதில் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் அஜய் (25) என்பவருக்கு இடது கையில் கத்தி குத்து விழுந்துள்ளது. இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமார் தங்கதுரை ஆகிய இருவரை கைது செய்தனர். போலீசார் மூவேந்தனை தேடி வருகின்றனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி மயிலாடுதுறையில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்
Next Story