முட்டம் இரட்டைப் படுகொலையை கண்டித்து விசி. கவினர் ஆர்ப்பாட்டம்
. மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் பிப்.14-ஆம் தேதி நடைபெற்ற இரட்டை படுகொலை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் புல்லட் ஓட்டிய தலித் இளைஞரின்;மீது நடத்தப்பட்ட தாக்குலுக்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முட்டம் கிராமத்தில் பிப்.14-ஆம் தேதி சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஹரிஷ், ஹரிசக்தி ஆகிய இளைஞர்களுக்கு நீதி கேட்டும், அப்பகுதியில் தொடர்ச்சியாக சாராய விற்பனை செய்வது தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பெரம்பூர் காவல்துறையை கண்டித்தும், சிவகங்கை மாவட்டத்தில் புல்லட் ஓட்டிய தலித் இளைஞரின்; கையை வெட்டிய கூலிப்படை கும்பலை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவ.மோகன்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்தவும், முட்டம் கிராமத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.
Next Story



