பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் சகோதரியுடன் திருக்கடையூர் கோவிலில் சாமி தரிசனம்

திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் குடும்பத்துடன் சாமி தரிசனம் . தமிழ்நாடு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் ஶ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சிவபெருமான் இத்தலத்தில் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி பகதர் மார்க்கண்டேயருக்காக எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. 60, 70, 80, 90, 100 வயது தொடங்குபவர்கள் பூர்த்தி அடைந்தவர்கள் கோவிலுக்கு வந்து சிறப்பு ஹோமம் செய்து சாமி தரிசனம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பதை ஐதீகம். மேலும் பல்வேறு சிறப்புகள் உடைய இக்கோவிலில் இன்று பாண்டிச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் சகோதரிக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை தொடர்ந்து பீமரத சாந்தி நடைபெற்றது இதில் பங்கேற்பதற்காக கோயிலுக்கு வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று சகோதரியின் பீமரத சாந்தியில் பங்கேற்று பின்னர், விநாயகர்,அமிர்தகடேஸ்வரர், காலசம்கார மூர்த்தி, அபிராமி உள்ளிட்ட சுவாமி சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்து வழிபட்டார் பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை சார்பில் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை (guard of honour) ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
Next Story