உங்களைத் தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி ஒரு நாள் தங்கியிருந்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். சின்னங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, காலமநல்லூர் விவசாயிகள் நில உரிமை பதிவேடுகள் ஆய்வு மற்றும் ஆக்கூர் வேளாண்மை விரிவாக்கம் மையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அதனைத் தொடர்ந்து திருக்கடையூர் கால்நடை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். தில்லையாடியில் அமைந்துள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அப்பகுதி விவசாயிகளிடம் கொள்முதல் நிலையத்தில் ஏதேனும் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறதா எனவும் விவசாயிகளிடம் கேள்வி எழுப்பினார் எவ்வித பணமும் பெறப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story





