இந்து அறநிலையத்துறை நிலை கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் போராட்டம்
: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைவீதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட மன்மதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சர்வே எண் 176/2ல் உள்ள 3875 சதுரஅடி இடத்தில் கண்ணன் என்பவர் பல ஆண்டுகளாக வணிகம் செய்து வருகிறார் இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வரை வாடகை நிலுவையின்றி 2 லட்சத்து 39 ஆயிரத்து 940 ரூபாய் வரவு வைத்துள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் சான்று வழங்கியுள்ளனர். ஆனால் கடந்த 2016 ஆண்டு முதல் கோயில் நிலங்களில் குடியிருப்போர் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட வாடகை என்ற பெயரில் கண்ணன் ரூபாய் 12 லட்சத்து 50 ஆயிரம் வாடகை செலுத்தவில்லை என்று கூறி ஆக்கிரமிப்பாளராக கருதி இடத்தை காலி செய்ய அறநிலையத்துறை அதிகாரிகள் நோட்டிஸ் அனுப்பி உள்ளனர். இச்சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கண்ணன் வழக்கு தொடுத்து ரூபாய் 5 லட்சம் நீதிமன்றம் உத்தரவின் பேரில் அறநிலையத்துறைக்கு செலுத்தியதாகவும், வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணன் இடத்தை காலி செய்யக்கோரி காலி செய்யாத பட்சத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோயில் வசம் இடத்தை கையகப்படுத்துவதாக மீண்டும் நோட்டீஸ் வழங்கி இன்று ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று கூறப்பட்டது. இதனையறிந்த கண்ணன் மற்றும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்ட செயலாளர் விஜய் தலைமையில் மாநில பொருளாளர் துரைராஜ், சி பி ஐ எம் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மற்றும் பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து கண்ணன் கடையின் முன்பு இந்து சமய அறநிலையத்துறை கண்டித்து கடையின் முன்பு திரண்டனர். அறநியைத்துறை அதிகாரிகள் வராத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு மற்றும் தனிநபர் இடத்தில் கண்ணன் வணிகம் செய்து வரும் இடம் உள்ளதாகவும், ஆனால் அறநிலையத்துறை எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் பட்டாவை மற்றும் வைத்துக் கொண்டு கோயிலுக்கு சொந்தமான இடம் என்று வாடகை வசூல் செய்து வருவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறி கடையின் முன்பு கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் மனைகளில் குடியிருப்போர் வணிகம் மற்றும் விவசாயம் செய்பவர்களிடம் உயர்த்தப்பட்ட வாடகை என்ற பெயரில் இந்து சமய அறநிலையத்துறை பொது மக்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் ஆவனங்களை பரிசீலனை செய்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story




