நேரடி நெவ் கொள்முதல் நிலைய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்
:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் கிராமத்தில் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ரூ.62.50 லட்சம் மதிப்பீட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கட்டுவதற்கு 2023-ஆம் ஆண்டு ஏப்.25-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிகள் சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து காஞ்சிவாய் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி வைத்து, கொள்முதலை தொடக்கி வைத்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் கோபிநாத் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story




