பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறையில் கல்லூரி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்றபடட்டோர் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்:-
மயிலாடுதுறை நகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணியை மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி துவங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த பேரணியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி, ட்ரிபிள் சி சமுதாய கல்லூரி, ஜெயராம் எஜுகேஷனல் டிரஸ்ட் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்த்து பச்சயத்தை காத்து வளர்க்க வேண்டும், மாசில்லா உலகம் படைத்து மகத்துவமாய் வாழ வேண்டும், வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்து தூய்மையான காற்றை சுவாசிக்க வேண்டும், சுற்றுச்சூழலையும் சுகாதாரத்தையும் காக்க வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை பதாகைகளாக ஏந்தி முழக்கமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். பேரணி துவங்கிய இடத்திலயே நிறைவடைந்தது. இதில் நகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் ஆடலரசி, சுகாதார அலுவலர் டேவிட் பாஸ்கர்ராஜ் சுகாதார ஆய்வாளர் தீபன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story