உலக தாய்மொழி தினத்தன்று தமிழை வாழ்த்தியும் இந்தியை விமர்சித்தும் போஸ்ட்டர்கள்

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் வாழ்க என்றும் ஹிந்தியை எழுதி அதை அழித்தும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆங்காங்கே தமிழ் வாழ்க என எழுதப்பட்டு அதற்கு கீழ் ஹிந்தி மொழி எழுத்துக்களை எழுதி அதனை அழித்தது போல ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹிந்தி மொழி குறித்து கடந்த சில தினங்களாக தமிழகத்தில் சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது. பல அரசியல் கட்சி தலைவர்கள் மொழி சர்ச்சை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிப் 21, உலக தாய் மொழி தினமான இன்று காலை புதிய பேருந்து நிலையம் கச்சேரி சாலை காந்திஜி ரோடு பேருந்து நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தமிழ் வாழ்க என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த வாசகத்திற்கு கீழே இந்தி மொழி எழுத்துக்களை எழுதி அதனை அழித்தவாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது இன்று உலக தாய்மொழி தினமான தமிழ் வாழ்க என்றும் வளர்க என்றும் இந்தி எதிர்ப்பு வாசகத்தை உள்ளடக்கி பொதுமக்கள் இந்தி திணிப்பை எதிர்க்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது
Next Story