இரண்டாம் நாள் நாட்டியாஞ்சலியில் மல்லாரி, தில்லானா நாட்டிய நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் 2ஆம் நாள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் சென்னை, கோவை, மயிலாடுதுறை மாவட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு:-
. மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக 19 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று 23ஆம் தேதி துவங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த நாட்டியாஞ்சலி விழாவில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மல்லாரி, வர்ணம், பித்தன் என்றாலும் பேயன் என்றாலும், தில்லானா போன்ற நாட்டிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது. ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளி, பெங்களூரு ஸ்ரீநிதி, சென்னை தேஜஸ் நித்தியாஞ்சலி, கோவை வழுவூர் கிளாசிக்கல் பரதநாட்டிய ஹார்ட் சென்டர், ராஜமணியம்மாள் கலைக்கூடம் குழுவினரின் அசத்தலான பரதநாட்டிய நிகழ்வுகள் பார்வையாளர்’களை கவர்ந்தது
Next Story