அனைத்துக் கட்சி மாணவர் அமைப்பினர் இந்தியை எதிர்த்து போராட்டம்

தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, ஹிந்தி திணிப்புக்கு மயிலாடுதுறையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் மாணவர் அமைப்பினர் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்:-
. தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, ஹிந்தி திணிப்பு என மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மாணவர் அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் மாணவர் அமைப்பினர் கலந்துகொண்டு தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராகவும், மும்மொழி கொள்கையை எதிர்த்தும், இந்தி திணிப்பை கண்டித்தும் பேசி கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் அனைவரும் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதை எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி பின்னர் கலந்து சென்றனர்.
Next Story