சாதியின் பெயரால் வன்கொடுமைகளை தடுக்காத தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் புரட்சி பாரதம் கட்சியினர் தமிழக அரசின் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் கமலேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர்கள் முனுசாமி, பூண்டி.பாபு ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் சாதியின் பெயரால் நடைபெறும் வன்கொடுமைகளை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், பட்டியலின மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




