கிராமத்தில் மக்கள் தொடர்பு முகம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா ஸ்ரீகண்டபுரம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் கலந்துகொண்டு 54 பயனாளிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, தாட்கோ, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, முதலமைச்சரின் விரிவான காப்பீடுத்திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் ரூ.88.09 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் ஷபீர்ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story





