மாசி மாத அமாவாசை பால்குட விழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வரகடை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசை தினத்தன்று தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி குலத்தெய்வகாரர்கள் பொதுமக்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்வது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு மாசி மாத அமாவாசை தினமான இன்று பால்குடம் விமர்சையாக நடைபெற்றது. பழவாற்றுகரையில் இருந்து சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு காப்பு கட்டி விரதமிருந்த 50 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து மேள வாத்தியங்கள் முழங்க காளியாட்டத்துடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். வழி நெடுகிலும் பொதுமக்கள் சக்திகரகத்திற்கு தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பால்குடத்தால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story