விசிக கொடி கம்பம் தகர்ப்பு மறியல் போராட்டம்
. மயிலாடுதுறை மாவட்டம் குறிச்சி ஊராட்சி ராஜன் வாய்க்கால் பாலத்தின் அருகில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தி ராஜன் வாய்க்காலில் வீசிவிட்டும், சாலை ஓரத்தில் இருந்த அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் பேனரையும் கிழித்த மர்ம நபர்களை கண்டித்தும் கைது செய்ய வலியுறுத்தியும் சித்தமல்லியிலிருந்து மயிலாடுதுறை செல்லும் அரசு பேருந்தை மறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அக்கட்சியினர் 50 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், தொடர்ந்து விசிக கொடிக்கம்பங்கள், கல்வெட்டுகள் சேதப்படுத்தப்படுவதை கண்டித்தும், பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி மற்றும் மணல்மேடு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story




