அரசு மருத்துவமனையில் செவிலியர் திடீர் உயிரிழப்பு

. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா மணல்மேடு காவல் சரகத்துக்கு உட்பட்ட மேலஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையன் மகள் தையல்நாயகி(30). இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நீடுரை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவருடன் திருமணம் ஆகிய நிலையில் ஒரு சில நாட்களிலேயே கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். மணல்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு வருடங்களாக செவிலியராக பணியாற்றி வந்த இவர் நேற்று இரவு பணிக்கு சென்றுள்ளார். இரவு 8.30 மணி அளவில் வீட்டிலிருந்து கொண்டுசென்ற இரவு உணவை சாப்பிட்ட தையல்நாயகி, 9 மணி அளவில் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தையல்நாயகியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த சுகாதார நிலைய அலுவலர்கள் அவரை மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் கொண்டு சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தையல்நாயகி ஏற்கனவே உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார். ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்த தையல்நாயகி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மணியின் போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story