பைஸியை விடுதலை செய் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைஸி கைதைக் கண்டித்து மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்:-
வெளிநாட்டு பணம் பரிமாற்றம் தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைஜி அமலாக்க துறையால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு முன்பு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முஹம்மது ரபி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், செயற்குழு உறுப்பினர் நவாஸ்கான் மற்றும் பெண்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story