மகன் விபத்தில் இறந்த துக்கத்தில் இருந்த நபர் விஷம் குடித்து தற்கொலை

X
. மயிலாடுதுறை அருகே உள்ள நாகமங்கலத்தை சேர்ந்த மூர்த்தி இவர் போர்வெல் போடும் வேலை பார்த்து வந்துள்ளார், இவரது மகன் அஜீத் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி பலியானார், அன்றிலிருந்து குடிபோதைக்கு அடிமையான மூர்த்திக்கு வயிற்றுவலி கடுமையானது,இதனால் சம்பவ தினத்தன்று இரவு வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிவிழுந்துள்ளார், அவரை உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் சேர்த்திருந்தனர்,ஆனால் சிகிச்சை பலனின்று மறுநாள் இறந்துவிட்டார் இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
Next Story

