, குறைதீர் கூட்ட மனுக்களுக்கு அரசாணை வழங்கும் விழா

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் திருக்களாச்சேரி ஊராட்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தலைமையில் பூம்புகார் தொகுதி மக்களின் இரண்டாம் கட்ட குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. பூம்புகார் தொகுதியில் திருக்களாச்சேரி மற்றும் காட்டுச்சேரி கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில், 100 நாள் வேலை வாய்ப்பு அட்டை , இலவச வீட்டுமனை பட்டா , முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் ,கலைஞர் உரிமைத்தொகை கலைஞரின் கனவு இல்லம் மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் திருக்களாச்சேரி மற்றும் எடுத்துக்கட்டி ஊராட்சியில் பெறப்பட்ட மனுக்கள் சரி பார்க்கப்பட்டு 50 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு அடையாள அட்டை ,மகளிர் உரிமை தொகை அட்டை உள்ளிட்ட அரசாணையை மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் பயன் பெற்ற பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஸ நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், கிராம அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story