இரட்டை கொலை செய்த மூவர் குண்டர் சட்டத்தில் கைது

இரட்டை கொலை செய்த மூவர் குண்டர் சட்டத்தில் கைது
X
இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுசிறையில் உள்ள   முன்று சாராய வியாபாரிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது:-  
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரக எல்லைக்குள்பட்ட முட்டம் கிராமத்தில் கள்ளச் சாராய பிரச்னையில் ஏற்பட்ட தகராரால் கடந்த 14-ஆம் தேதி ஹரிஸ், ஹரிசக்தி ஆகிய இரண்டு இளைஞர்கள் கள்ளச் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி, அவரது மனைவி மஞ்சுளா, மகன்கள் தங்கதுரை, மூவேந்தன், மருமகன் ராஜ்குமார் ஆகிய 5 பேரையும், தலைமறைவாவதற்கு புகலிடம் கொடுத்த சஞ்சய் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பெரம்பூர் காவல் ஆய்வாளராக இருந்த நாகவள்ளி, தனிப்பிரிவு காவலர் பிரபாகரன், உதவி ஆய்வாளர்கள் மணிமாறன், சங்கர் ஆகிய 4 பேர் ஏற்கெனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி எஞ்சிய 19 பேரும் கடந்த 8-ஆம் தேதி கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.    இந்நிலையில் அடுத்த அதிரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரையின்பேரில் தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமார் ஆகிய மூவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான ஆணை கடலூர் சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது.
Next Story